• Sun. Jun 28th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

அரசு கல்லூரியில் வினாத்தாள்கள் கொள்ளையடிக்க முயற்சி?

ByK Kaliraj

Feb 16, 2026

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டமலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது இந்த கல்லூரியில் ஆண் பெண் என 800 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று வழக்கம்போல் காலை கல்லூரியை திறப்பதற்காக காவலாளி சென்றபோது கல்லூரியின் கொடிக்கம்பம், கண்ணாடி மற்றும் சிசிடிவி கேமராக்கள் அடித்து உடைக்கப்பட்டிருந்தன. இது குறித்து கல்லூரி முதல்வர் சைலா டேனியலுக்கு தகவல் தெரிவித்தனர், பின்னர் இச்சம்பவம் குறித்து கல்லூரி முதல்வர் சாத்தூர் நகர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் சிசிடிவி கேமரா வீடியோவை ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் இந்த கல்லூரியில் கடந்த ஒரு வாரமாக இலங்கலை கல்வியியல் தேர்வானது நடைபெற்று வருகிறது, நேற்று ஞாயிற்று கிழமைவிடுமுறை என்பதால் கல்லூரியின் கண்ணாடி மற்றும் சிசிடிவி கேமராக்களை கொடிகம்பத்தால் உடைத்து தேர்வுக்கான வினா தாள்களை திருட முற்பட்டிருக்கலாம் என போலீசார் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்