• Mon. Jan 5th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தமிழர் தாயக நாள் பொதுக்கூட்டம் நடத்த முயற்சி – பலர் கைது

காரைக்குடியில் தமிழர் தாயக நாள் பொதுக்கூட்டம் நடத்த முயற்சி செய்த சுப.உதயகுமார் உட்பட 20 ற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பெரியார் சிலை பகுதியில் அணு உலை போராட்ட குழு தலைவரும், பச்சை தமிழகம் கட்சியின் தலைவருமான உதயகுமார் தலைமையில், தமிழர் தாயக நாள் பொதுக்கூட்டம் நடத்த போலீசாரிடம் அனுமதி கோரியுள்ளனர்.போலீசார் அதற்கு அனுமதி தரவில்லை என கூறப்படுகிறது.

தடையை மீறி பொதுக்கூட்டம் நடத்த முயன்ற போது, சுப.உதயகுமார், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் ஷெரீப், மக்கள் மன்ற தலைவர் ராஜ்குமார் உட்பட 20 ற்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.