தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டியில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்பு….
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைகாண மாவட்ட அளவிலான போட்டி சேலத்தில் உள்ள காந்தி விளையாட்டு மைதானத்தில் கடந்த 15 ஆம் தேதி துவங்கியது நாள்தோறும் பல்வேறு விதமான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன அதன் அடிப்படையில் இன்று பள்ளி கல்லூரி, அரசு ஊழியர், மாற்றுத்திறனாளி உட்பட பல்வேறு தரப்பினருக்கு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது
இந்த நிலையில் இன்று பள்ளி மாணவி மாணவிகளுக்கான விளையாட்டு போட்டி நடைபெற்றது இந்த போட்டியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்
குறிப்பாக கைப்பந்து போட்டி, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், 100,200,400 மீட்டர் ஓட்டப்பந்தயம் என பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றது இதில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
பெண்களுக்கான கைப்பந்து போட்டியை சேலம் மாவட்ட கைப்பந்து கழக ஆலோசகர் விஜயராஜ், செயலாளர் சண்முகவேல் ஆகியோர் கலந்துகொண்டு துவக்கி வைத்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர் அப்போது மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் உடன் இருந்தார்
வருகின்ற 28-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் ஒவ்வொரு பிரிவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் மாநில அளவில் நடக்கும் போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.