

ஒருவருக்கு ஒரே நேரத்தில் குரங்கம்மை, கொரோனா மற்றும் எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலியை சேர்ந்த பாதிப்புக்குள்ளான நபர் 36 வயது மதிக்கத்தக்கவர்.கடந்த ஜூன் மாதம் இத்தாலியில் இருந்து ஸ்பெயின் நாட்டிற்கு 5 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். பின்னர் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பினார்.அவர் நாடு திரும்பியதும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது பரிசோதனையில் தெரிய வந்ததது. சில நாள்களுக்குப் பின் அவருக்கு குரங்கம்மை அறிகுறிகள் உடலில் புண்கள் தென்படத் தொடங்கின.
மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். அப்போது நடைபெற்ற பரிசோதனையில் அவருக்கு குரங்கம்மை மற்றும் எச்ஐவி பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.அவருக்கு ஒரு வாரம் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், கொரோனா மற்றும் குரங்கம்மை பாதிப்பில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஒரே நபருக்கு உயிர் கொல்லி நோய்கள் ஒரே நேத்தில் தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.