• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

என்னை ஒருமையில் பேசினாரா..?? மேயர் பிரியா விளக்கம்…

Byகாயத்ரி

Aug 26, 2022

சென்னை மேயர் பிரியாவை ஒருமையில் பேசியதாக கே.என் நேரு மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கும் நிலையில் இதுகுறித்து மேயர் ப்ரியா விளக்கம் அளித்துள்ளார்.

சமீபத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என் நேரு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியா உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மேயர் ப்ரியாவை பார்த்து ‘நீ பேசும்மா’ என்று அமைச்சர் கே.என்.நேரு கூறியதை அடுத்து அவரை ஒருமையில் பேசி விட்டதாக அமைச்சர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து விளக்கமளித்த சென்னை மேயர் பிரியா ’அமைச்சர் கே.என் நேரு அவர்கள் என் தந்தையைப் போன்றவர், அவர் எப்போதும் என்னை ஒரு மகள் போன்று தான் நடத்துவார். அந்த உரிமையை அவர் பேசியிருக்கலாம், ஒருமையில் பேசுவது உரிமையில் தானே தவிர மரியாதை குறைவாக நான் கருதவில்லை என்று கூறினார். மேலும் சென்னையை பொருத்தவரை எந்த திட்டத்தை வகுத்து எடுத்துச் சென்றாலும் அதற்கு முழு அளவில் ஒத்துழைப்பு கொடுப்பார்கள் என்றும் அதனால் அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதையும் மதிப்பும் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.