• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

ஆசிய விளையாட்டு : பெண்கள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம்..!

Byவிஷா

Sep 29, 2023

துப்பாக்கி சுடுதல் பெண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனைகள் தங்கம், வெள்ளிப்பதக்கம் வென்றனர். ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 8 தங்கம், 11 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 31 பதக்கங்கள் வென்றுள்ளது. இதன் மூலம் பதக்க பட்டியலில் இந்தியா 4ம் இடத்தில் உள்ளது.
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வருகிறது. இதில் வெள்ளிக்கிழமை (செப்.20) அன்று பதக்கத்தின் கணக்கை கூட்டியுள்ளது. துப்பாக்கிச் சுடுதல், ஆடவர் இரட்டையர் டென்னிஸில் பதக்கம் வென்று அசத்தியுள்ளது.

ஆடவர் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் குழு:
இந்த பிரிவில் 1769 புள்ளிகளை பெற்று புதிய உலக சாதனை படைத்துள்ளது ஐஸ்வர் பிரதாப் சிங் தோமர், ஸ்வப்னில் மற்றும் அகில் ஷியோரன் ஆகியோர் அடங்கிய இந்திய குழு. இரண்டாம் இடத்தில் சீனாவும், மூன்றாம் இடத்தை கொரியாவும் பிடித்தன.

மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் குழு:
1731 புள்ளிகளுடன் இந்தப் பிரிவில் வெள்ளி வென்றுள்ளது இந்தியா. ஈஷா சிங், பாலக் மற்றும் திவ்யா ஆகியோர் இதில் இந்தியா சார்பில் பங்கேற்றிருந்தனர். முதல் இடத்தை சீனா பிடித்தது.

மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தனிநபர்:
இந்த பிரிவில் இந்தியாவின் பாலக் தங்கமும், ஈஷா சிங் வெள்ளியும் வென்றனர். இதே போல ஆடவர் இரட்டையர் டென்னிஸ் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் மற்றும் சாகேத் ஆகியோர் வெள்ளி வென்றனர். ஸ்குவாஷ் மகளிர் டீமில் இந்தியா வெண்கலம் வென்றுள்ளது