• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட மாட்டேன் … அசோக் கெலாட்

ByA.Tamilselvan

Sep 29, 2022

காங்கிரஸ் தலைவர் பதிவுபோட்டியிடப்போவதில்லைஎன தேர்தலில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 17-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் 24ந் தேதி தொடங்கியது. நாளை மனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும். இந்த தேர்தலில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டும், அவரை எதிர்த்து கேரள எம்பி சசிதரூரும் களம் இறங்குவார் என கூறப்பட்டது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதில்லை என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். சோனியா காந்தியை சந்தித்த பிறகு அசோக் கெலாட் இந்த தகவலை தெரிவித்துள்ளார். அசோக் கெலாட் இது பற்றி கூறுகையில், “ராஜஸ்தானில் ஏற்பட்ட நெருக்கடியால் நான் வருத்தம் அடைந்தேன். சோனியா காந்தியிடம் மன்னிப்பு கோரினேன். காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கு நான் போட்டியிடவில்லை” என்றார். ராஜஸ்தான் முதல் மந்திரியாக நீங்கள் நீடிப்பீர்களா? என்று கேட்டதற்கு ‘இதுபற்றி சோனியா காந்தி முடிவு செய்வார்’ என்றார் கெலாட்.