• Sat. Oct 12th, 2024

விரதமிருந்து சபரிமலைக்கு செல்லும் டாப் நடிகர்!

ஆர்.ஆர்.ஆர் வெளியான கையோடு 41நாட்கள் விரதமிருந்து சபரிமலைக்கு செல்ல உள்ளார் ராம்சரண்.

ரத்தம் ரணம் ரௌத்தரம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன், ரே ஸ்டீவன்சன், ஒலிவியா மோரிஸ், சமுத்திரகனி, ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் இப்படம் வெளியாகி உள்ளது.

தெலுங்கில் மட்டும் இப்படம் 200 கோடி வசூலையும், உலக அளவில் 800 கோடி வசூலையும் கடந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கில் இதுவரையிலும் அதிக வசூலைப் பெற்ற படமாக பாகுபலி 2 படமாக 204 கோடியுடன் முதலிடத்தில் இருந்தது. தற்போது அந்த வசூலை ஆர்ஆர்ஆர் கடந்து 210 கோடியைப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ராம்சரண் ஐயப்பா சாமிக்கு மாலை போட்டுவிரதம் இருப்பதாகவும், ஆண்டுதோறும் 41 நாட்கள் விரதம் இருந்து சபரிமலைக்கு செல்வதை ராம்சரண் வழக்கமாக கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ராம்சரண் தற்போது ஷங்கரின் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்திற்கு தற்காலிகமாக RC15 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில், கியாரா அத்வானி, ஜெயராம், அஞ்சலி, சுனில், ஸ்ரீகாந்த் மற்றும் நவீன் சந்திரா உள்ளிட்டோர் லீட் ரோலில் நடித்துள்ளனர். இந்த படத்தை தெலுங்கு பட உலகின் மிகப்பெரிய தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷனின் தில் ராஜூ தயாரிக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *