• Sun. Jan 4th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அருள்மிகு கோட்டை முனீஸ்வரர் கோயில் 63 ஆம் ஆண்டு பொன்விழா

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் குந்தா பாலம் கீழ் முகம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கோட்டை முனீஸ்வரர் கோவிலில் 63 ஆம் ஆண்டு திருவிழா நடைபெற்றது.

இதில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் 7 2 2023 செவ்வாய்க்கிழமை வரை குந்தா பாலம் கிழ் முகாமில் கம்பீரமாக அமைந்திருக்கும் அய்யன்கோட்டை முனீஸ்வரன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 3-2- 2023 வெள்ளிக்கிழமை மாலை 6:00 மணி மேல் பூசாற்று என்கின்ற காப்பு கட்டுதல் நடைபெற்றது

.அதைத்தொடர்ந்து 4-2 -2003 சனிக்கிழமை ஐயனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 6-3- 2023 திங்கட்கிழமை அன்று பூரண கும்பகரகம் அலங்கரிக்கப்பட்ட பூர்ண கும்பகரகத்தில் ஊர்வலம் மஞ்சூர் மேல் பஜாரிலிருந்து வாகன ஊர்வலமாக குந்தா சிவன் கோவில் மைதானத்திலிருந்து இரவு எட்டு மணிக்கு மேல் தாரை தப்பட்டை முழங்க புறப்பட்டு இரவு 11 மணிக்கு மேல் கோட்டை முனீஸ்வரர் ஆலயத்திற்கு வந்து அடைந்தது 7-2-2023 செவ்வாய்க்கிழமை உச்சி பூஜை உச்சி கரும்பு எடுத்தனர் அதைத்தொடர்ந்து பகல் ஒரு மணி முதல் பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது மாலை 6 மணிஅளவில் மறு பூஜை நடத்தப்பட்டு விழா சிறப்பாக பக்தர்களால் கொண்டாடப்பட்டது. இதில் கோட்டை முனீஸ்வரர் ஆலய திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.