• Tue. Apr 16th, 2024

நீதித்துறையின் மீது உள்ள நம்பிக்கை மக்களுக்கு குறை துவங்கிவிடும்.., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன்

சேலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியது..,

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள ஐந்து நீதிபதிகளில் ஒருவர் விக்டோரியாகௌரி என்பவரை அவசர அவசரமாக பணியமாற்றி மத்தியஅரசு உத்தரவிட்டுள்ளது. பாஜகவின் அகில இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் தலைவராக இருந்துவிட்டு பகிரங்கமாக சிறுபான்மை மக்கள் மீதும், கூட்டாட்சி குறித்தும் வெறுப்பு அரசியல் குறித்து பகிரங்கமாக பேசி உள்ளார்.நீதிபதியானால் எவ்வாறு அந்த சார்பு இல்லாமல் வழக்குகளை சரியாக விசாரிப்பார் என்று தெரியவில்லை. எனவே இதுகுறித்து குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக கூறியுள்ளார்.இவரைப் போன்றவர்களை உயர்நீதிமன்ற நீதிபதி நியமிப்பது மோசமான செயல்.இதனால் நீதித்துறையின் மீது உள்ள நம்பிக்கை மக்களுக்கு குறை துவங்கிவிடும்,இவ்வளவு அவசரமாக நியமிக்கப்பட்ட அவசியமில்லை சுட்டிகாட்ட விரும்புகிறேன் என்றும் பேசினார்.

மேலும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் அதானி ஊழல் முறைகேடுகள் மற்றும் அதன்மூலம் இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்தும் பாராளுமன்ற குழு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.பகிரங்கமாக ஒரு ஆய்வு நிறுவனம்,இவ்வளவு முறைகேடு நடந்துள்ளது என கேள்வி எழுப்பியது. அதற்கு முறையான பதில் அளிக்கவில்லை அந்த ஆய்வறிக்கை வந்தவுடன் அதானியின் பங்கு மார்க்கெட் சரிபாதியாக குறைந்துவிட்டது. எல்ஐசி,வங்கிகளில் பங்குகளும் குறைந்துவிட்டது. இதனால் இந்திய பொருளாதாரத்தில் எந்த தாக்கமும் ஏற்படவில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்கள் இதுபோன்று தனியார் நிறுவனங்களிடம் பல ஆயிரம் கோடி முதலீடு போட்டுள்ளது. இதனால் அரசு நிறுவனங்களுக்கு தான் பாதிப்பு ஏற்படும், இதனால் ஏழை மக்களின் லாபவிகிதம் தான் குறையும், எனவே பாராளுமன்ற குழுவின் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இதைதொடர்ந்து பேசியவர்,100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு நிதியை குறைத்து இருப்பது, கிராமப்புறவளர்ச்சி, கல்வி,சுகாதாரம் உள்ளிட்டவைகளுக்கு நிதியை குறைத்துள்ளது என்றார்.

மேலும் வேலைவாய்ப்பு குறித்து இந்த பட்ஜெட்டில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை,இதை கண்டித்து பிப்ரவரி 27,28ஆம் தேதியில் கண்டன இயக்கத்தை தமிழகம் முழுவதும் ஒன்றிய,நகர, மாவட்ட தலைநகரில் நடத்த கட்சி தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் காலம் தவறி மழைபெய்ததன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் மூன்று லட்சம் ஏக்கர் நிலத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் நாசமாகியது. தமிழக முதல்வர் அவசரமாக தலையிட்டு இரண்டு அமைச்சர்களை அனுப்பி வைக்க வேண்டும்,மேலும் அதிகாரிகளைக் கொண்டு குழு அமைத்து ஆய்வு நடத்தி, தாமதமின்றி ஆய்வறிக்கையை பெற்று உரிய இழப்பீடு வழங்க வேண்டும் மற்றும் 33 சதவீதம் சதவீதத்திற்கு கீழ் இழப்பு உள்ளவர்களுக்கு இழப்பீடு இல்லை என்பது பெரும் வருத்தத்திற்குரிய ஒன்றாக உள்ளது. அவர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

தமிழகத்தில் பல இடங்களில் பட்டியல் இனமக்கள் மீது பல்வேறு தாக்குதல் மற்றும் தீண்டாமை கொடுமை நடைபெற்று வருகிறது.
குறிப்பாக சேலம் திருமலைகிரி பகுதியில் ஆலயம் நுழையும் போராட்டம் நடத்தப்பட்டது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பொதுஆலயங்களுக்கு செல்லக்கூடாது என்று தலித் மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.மேலும் புதுக்கோட்டை வேங்கைவயல் பகுதியில் மனித கழிவுகளை குடிநீரில் கலந்த சம்பவம் நடைபெற்று உள்ளது. இதுவரை குற்றவாளி யார் என்று தெரியவில்லை.
சின்னகிராமத்தில் நடந்த பிரச்சினைக்கு ஏன் இந்த தாமதம் என்று தமிழக அரசு காவல்துறையின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், உண்மையான குற்றவாளி யாராக இருந்தாலும் கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் உள்ள தீண்டாமை கொடுமைகளை தடுத்து நிறுத்த சமூக நீதி வாரியம் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு காவல்துறை மற்றும் மாவட்ட அதிகாரிகள் மூலம் இலக்கமான நிலையை உருவாக்க வேண்டும் தீண்டாமை கொடுமை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி யாருக்கு என்று தெளிவாக தெரிந்த ஒன்று.. மதசார்பற்ற கூட்டணி கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவன் அதிகப்படியான வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார். குறிப்பாக அதிமுகவின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை,வேட்பாளர் தேர்வு செய்து மனுதாக்கல் செய்வதற்குள் அதிமுக கட்சி திணறிவிட்டது. அதிமுக சிதறி கிடைக்கிறது. இவற்றை பாஜக ஒன்றாக்கி குதிரையின் மீது சவாரி செய்ய நினைக்கிறார்கள் அதற்கு வாய்ப்பு இல்லை என்றார்.

அதிமுக வேட்பாளர் இரட்டை இலையில் நின்றாலும் சரி, இரட்டையில் நின்று தான் ஜெயலலிதாவை தொற்று உள்ளார். சின்னமல்ல பிரச்சினை அதிமுகவின் ஆட்சி, முறைகேடு நடவடிக்கை, மக்கள் விரோத நடவடிக்கைகள், இன்றும் பாஜகவை தோளின் மீது சுமந்து கொண்டு செல்லும் மோசமான போக்கு,இதனை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை,ஈரோடு மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.

அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இருப்பதற்கு, பிரதானமாக இருப்பது அதிமுக ஆட்சி தான் காரணம்.திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டு காலம் தான் ஆகிறது. தமிழகஅரசுக்கு பொருளாதார நிதிநிலை நெருக்கடி இருந்து வருகிறது.கடந்த ஆட்சியில் 5 முக்கால் லட்சம் கோடி கடனில் விட்டு வைத்து சென்றுள்ளனர். மின்சாரவாரியம்,போக்குவரத்து வாரியம் உள்ளிட்டவைகள் முடங்கி போய்விட்டது.படிப்படியாக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார்கள். பொருளாதார நிலைமை படிப்படியாக சீரான பிறகு அரசுஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றப்படும் என்று கூறியுள்ளார் .

திமுக ஆட்சி நீடிக்கும் வரை திமுக கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக போராடும்,பாஜகவுக்கு எதிரான போராட்டத்தில், அதிமுக பிஜேபியை வீழ்த்தவேண்டும் என்றால் திமுகவுடன் இணைந்து செயல்படுவதைத் தவிர வேறு வழியில்லை,பிஜேபியை எதிர்க்கின்ற போராட்டத்தில் திமுகவுடன் இணைந்து பணியாற்றுவோம்,மக்கள் நலன் சார்ந்துள்ள பிரச்சனைகளில் மக்களின் சார்பாக திமுக அரசிடம் மக்களின் கோரிக்கைகளை வைத்து வாதாடும்,போராடுவோம் என்றார்.

மேலும் கலைஞர் கருணாநிதி தமிழகத்தில் ஆளுமையாக திகழ்ந்தவர்.அவருக்கு நினைவுச்சின்னம் வைப்பது எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை.திமுக அரசு பேனா நினைவுச்சின்னம் வைப்பது குறித்து அரசு தான் முடிவு எடுக்கவேண்டும் என்றும்,எங்களைப் பொறுத்தவரை சின்னம் வைக்கும் போது சர்ச்சைக்குள்ளாகாமல், விவாத பொருளாகாமல் வைக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய கருத்து என்றும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *