

தூத்துக்குடி மாவட்டம் வானரமுட்டியில் மறைந்த முன்னாள் முதல்வரும், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 4 ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு வானரமுட்டி ஊராட்சி மன்றத் தலைவர் இசக்கியம்மாள் தலைமை வகித்தார். வானரமுட்டி முன்னாள் ஒன்றிய கவுன்சிலரும், திமுக மாவட்ட பிரதிநிதியுமான மாரியப்பன் முன்னிலை வகித்தார். தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த கலைஞரின் உருவ படத்திற்கு திமுக மாவட்ட பிரதிநிதி மாரியப்பன் மலர் தூவி மரியாதை செய்தார். பின்னர் நிர்வாகிகள் அனைவரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் அவைத்தலைவர் லட்சுமணதேவர், திமுக இளைஞரணி செயலாளர் அருண், ராமலிங்கபுரம் மகேந்திரகுமார், கல்லூரணி செயலாளர் முகேஷ்குமார், மாணவரணி மாரிராஜ், திமுக பிரமுகர் கருப்பசாமி, மூர்த்தி, கிஷோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வானரமுட்டி திமுக மாவட்ட பிரதிநிதி மாரியப்பன் செய்திருந்தார்.
