தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான விழா ஆண்டிபட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. புதிய தலைவராக செந்தில்குமார், செயலாளராக முத்துப்பாண்டி, பொருளாளராக சி பாண்டியன் ஆகியோர் அடங்கிய குழு தேர்வு செய்யப்பட்டது .புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு முன்னாள் ரோட்டரி சங்க ஆளுநர் ஜமீர் பாஷா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனைத் தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக முன்னாள் நீதிபதி மாயாண்டி அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். விழாவில் முன்னாள் தலைவர் சுப்பு புதிதாக தேர்வு செய்யப்பட்ட செந்தில்குமாரிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார் .துணை ஆளுநர் கேசவன் மற்றும் பலர் புதிய நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக மாணவிகளின் வரவேற்பு பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது .