கேம்பிரிட்ஸ் பல்கலைகழக ஆய்வாளர்கள் எலியின் செல்களிலிருந்து செயற்கை உயிரை கண்டுபிடித்துள்ளனர்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் எலியின் மூல செல்களிலிருந்து(stem cell) கரு ஒன்றை உருவாக்கியுள்ளார்கள். இது மூளை மற்றும் துடிக்கும் இதயம் ஆகியவற்றை உருவாக்குகிறது. விந்துவோ சினை முட்டையோ இல்லாமல் ஸ்டெம் செல்களைக் கொண்டு மாதிரி கருவை உருவாக்கியுள்ளார்கள். பாலூட்டிகளின் கருவின் தொடக்க நிலையில் செயல்படும் மூன்று ஸ்டெம் செல்களை ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்ளும் விதத்தில் சோதனை சாலையில் இயக்கி இயற்கையில் நடப்பதை போல நிகழ்த்தியிருக்கிறார்கள்.