தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின் பேரில் கலை பண்பாட்டு துறை, மண்டல கலை பண்பாட்டு மையம், நெல்லை மாவட்ட கலை மன்றம், தென்காசி இணைந்து நடத்தும் ஒயிலாட்ட கலை பயிற்சி முகாம் அழகுநாட்சியார்புரத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ ராஜா தலைமை வகித்து கலை பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார். திருநெல்வேலி மண்டல கலை பண்பாட்டு உதவி இயக்குநர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பழங்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேந்திரன் வாழ்த்துரை வழங்கி பேசினார். நாட்டுப்புற கலைஞர்கள் 50 பேருக்கு ஒயிலாட்ட கலை பயிற்சி மாவட்ட கலை மன்றத்தின் சார்பாக அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி ஜீலை 20 ம் தேதி முதல் 22 ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு நடக்கிறது. நிகழ்ச்சியில் குருவிகுளம் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் கடற்கரை, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சுதாபிரபாகரன், ஒன்றிய கவுன்சிலர்கள் கணேசன், செல்விபாலசுப்பிரமணியன், பழங்கோட்டை ஊராட்சி துணை தலைவர் இரவிச்சந்திரன், அழகுநாட்சியார்புரம் பாவணர் கலை குழு செந்தில்குமார் மற்றும் திமுக சார்பில் அந்தோணிராஜ் உள்பட பலர் பங்கேற்றனர். கலைவாணர் கலை குழு பொன்ஆனந்தராஜ் நன்றியுரை கூறினார்.