• Thu. Mar 27th, 2025

சுயேச்சை கவுன்சிலரே கைது செய்யுங்க! டிஎஸ்பி இடம் மனு…

ByMuthukumar B

Feb 22, 2025

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அடுத்து சுயேச்சை கவுன்சிலரே கைது செய்ய கோரி, திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் மாவட்ட துணை கண்காணிப்பாளரிடம் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் கடந்த 23ம் ஆண்டு 11ம் தேதி நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட சாதாரண கூட்டம் நடைபெற்றது. நகரமன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கூட்டம் ஆரம்பித்தவுடன் அதிமுக கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை கூறினர். அப்போது எழுந்து நின்ற திமுக நகர மன்ற உறுப்பினர்கள் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்படுவதாக ஒப்புதல் அளித்தனர். அப்போது அங்கு இருந்த 5 வார்டு நகர மன்ற பெண் கவுன்சிலர் தேவகி ஆவேசமடைந்து என்ன கூட்டம் நடத்துகிறீர்கள் என்று ஒருமையில் பேசி தகாத வார்த்தைகளால் திட்டியபடி வெளியே வந்தபோது நகர்மன்ற கூட்டம் நடத்துறீங்களா? இல்ல சக்கிலி கூட்டம் நடத்துறீங்களா? என ஜாதி பெயரை சொல்லி திட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி ஜாதி பெயரை சொல்லி ஒருமையில் பேசியது அங்கிருந்த ஊழியர்கள் நகராட்சி அதிகாரிகள் முகம் சுழித்தனர். நகர மன்ற கூட்டத்தில் பட்டியலின மக்களை குறிக்கும் வகையில் ஜாதி பெயரை சொல்லி திட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது, நகர மன்ற உறுப்பினர் தேவகி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதை அடுத்து திமுக கவுன்சிலர்கள் பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் மனு அளித்தும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் செய்தனர். இந்நிலையில் திமுக வழக்கறிஞர்கள் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தேவகி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இன்று நீதிபதி சுயேச்சை கவுன்சிலர் தேவகியை விசாரிக்குமாறும் கோவை மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் மேற்கு காவல் நிலைய ஆய்வாளருக்கு மூன்று மாதங்களுக்குள் பதில் மனு அளிக்குமாறு தீர்ப்பளித்தார். இதை அடுத்து திமுக கவுன்சிலர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் கூட்டணி கட்சியினர் பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஏ டி எஸ் பி சிருஷ்டி சிங் அவரிடம் மனு அளித்தனர்.

மாநில ஆதிதிராவிட நலக்குழு இணைச் செயலாளர் திப்பம்பட்டி ஆறுச்சாமி கூறுகையில்..,

கடந்த 23 ஆம் ஆண்டு 11ஆம் தேதி நடந்த நகராட்சி கூட்டத்தில் சுயேட்சை கவுன்சிலர் தேவகி பட்டியில் இன மக்களை அவதூறாக பேசும் வகையில் பேசியுள்ளார். இதை கண்டிக்கும் விதமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இன்று தீர்ப்பு வெளியாகி உள்ளது. ஆகவே சுயேட்சை கவுன்சிலர் தேவைகியை கைது செய்ய வேண்டும் என திமுக வழக்கறிஞர்கள் மற்றும் கவுன்சிலர்கள் கூட்டணி கட்சியினர் ஒன்று சேர்ந்து பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம் தெரிவித்தார்.