• Sat. Jun 6th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடு…

ByKalamegam Viswanathan

Feb 21, 2026

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. எதிர்க்கட்சியான அதிமுகவுடன் மத்தியில் ஆளுங்கட்சியான பா.ஜ.க. இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையில் செங்கல்பட்டு மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், மீண்டும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.

வரும் மார்ச் 1 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மதுரை வருகை தந்து பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார். இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, டாக்டர் அன்புமணி ராமதாஸ், டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்நிலையில் மதுரையில் பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்காக மதுரை விமான நிலையம் அருகே உள்ள மண்டேலா நகர் பகுதியில் 150 ஏக்கர் தேர்வு செய்யப்பட்டு மாநாட்டிற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி கடந்த 16 ஆம் தேதி நடைபெறுகிறது. கூடுதலாக பார்க்கிங் வசதிக்கு 100 ஏக்கர் பரப்பளவு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மண்டேலா பகுதியில் பிரதமர் பங்கேற்கும் மாநாட்டிற்கான ஏற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்ற வருகிறது மேடை மக்கள் அமரும் பகுதி ஏற்பாடு செய்யும் பணி தீவிரமா நடைபெற்று வருகிறது