• Thu. Apr 16th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

மதுரை விமான நிலையம் வந்த தமிழக முதல்வர் ..,

ByKalamegam Viswanathan

Feb 21, 2026

மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள எல்காட் தொழில்நுட்ப பூங்காவில் பின்னாகிள் நிறுவனத்தின் திறன் மேம்பாட்டு மைய கட்டிடத்தை முதல்வர் திறந்து வைக்கிறார்.

மதுரை தமுக்கம் முதல் நெல்பேட்டை வரை 1.3 கிலோ மீட்டர் நீளத்தில் ரூ 213. 80 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தை முதல்வர் திறந்து வைக்கிறார் இந்த பாலம், கோரிப்பாளையம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் அமைய உள்ளது.

இதனுடன் மருது சகோதரர்கள் சிலை காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார்.

மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் மேம்படுத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை முதல்வர் தொடங்கி வைக்கிறார்.

தொடர்ந்து மதுரை வண்டியூரில் ரூபாய் 50 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட பூங்காவை முதல்வர் திறந்து வைக்கிறார். அதில் மதுரையில் முதல் முறையாக ‘பிளோட்டிங் செட்டி’ என்னும் மிதவை நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் அலங்காநல்லூரில் 1,386.66 கோடி மதிப்பீட்டில் பகுதியில் 867 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டம், வாடிப்பட்டியில் ரூ 1.09 கோடி மதிப்பீட்டில் புதிய பேரூராட்சி அலுவலகக் கட்டிடத்தை காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார்.

மதுரை உத்தங்குடி கலைஞர் திடலில் மாலை தென்மண்டல திமுக பாக முகவர்கள் மாநாடு நடைபெறுகிறது. இது முதல்வர் மு க ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் ‘மறவோம்’ என்ற தலைப்பில் நடைபெறும் நிகழ்ச்சி முதல்வர் பங்கேற்கிறார், இதில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

தொடர்ந்து மதுரை விமான நிலையம் வழியாக தனி விமானம் மூலம் முதல்வர் சென்னை புறப்பட்டு செல்கிறார்.