• Sat. Apr 20th, 2024

இதில் உள்ள வைட்டமின் சி சத்து மற்றும் தாது உப்புக்கள் புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது. பித்தப்பை கோளாறுகள் வராமல் காக்கிறது. மூளைக்குச் செல்லும் ரத்த நரம்புத் தந்துகிகளில் ஹஸ்ட்ரோக்’ எனப்படும் ரத்தக்கசிவு ஏற்படாமல் பாதுகாக்கிறது. இருதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் பாதுகாக்கிறது. கண்களில் மஞ்சள் நிற கேட்ராக்ட் நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. பழங்களை மசியல் செய்து ஒரு கப் ஐஸ்கிரீமுடன் இணைத்துச் சுவைக்க, நமது உடலுக்கு 83 கலோரி வெப்பச்சத்தி கிடைக்கிறது! நாம் உண்ணும் உணவு நன்கு ஜீரணமாகி குடல் உறிஞ்சிகளால் உறிஞ்சப்பட்டு உட்கிரகிக்கப்பட்டு ரத்தத்துடன் கலக்க உதவுகிறது. ஈரல் பாதுகாப்பிற்கும் மற்றும் இருதயம் சம்பந்தமான நோய் வராமல் பாதுகாப்பதற்கும் துணை புரிகிறது. நுரையீரல்களை வலுவாக்கி வளமுறச் செய்கிறது. மலட்டுத்தன்மை நீக்கி விந்து விருத்திக்குத் துணைபுரிகிறது. உண்ணும் உணவின் புரோட்டீன் சத்தை நமது வயிற்றில் சுரக்கும் பெப்ஸின் என்னும் கஸ்ட்ரிக்ஜ×ஸ் பெப்டோனாக மாற்றுகிறது. பெப்டோனை சிறுகுடலில் சுரக்கும் ஜ×ஸ் அமினோஅசிடாக மாற்றி, அமினோஅசிட் புரோட்டீனாக ரத்தத்துடன் கலக்கச் செய்கிறது. இந்த புரோட்டீன் சிந்தஸிஸ் செயல்முறைக்கு இதன் பழச்சாறு பெரிதும் துணைசெய்கிறது. ரத்தத்தில் குளுக்கோஸ் சத்துக் குறைவு ஏற்படாதவண்ணம் பாதுகாக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *