• Sun. Jun 4th, 2023

அருணாசல பிரதேசத்தில் உயிர்நீத்த ராணுவ வீரர்கள்…

Byகாயத்ரி

Feb 9, 2022

அருணாசல பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக சீரற்ற வானிலை நிலவி வருவதோடு கடுமையான பனிப்பொழிவும் இருக்கிறது.

காமெங் செக்டார் என்ற பகுதியில் ராணுவ வீரர்கள் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கடும் பனிச் சரிவு ஏற்பட்டதால் லெப்டினன்ட் கர்னல் ஹர்ஷ் வர்தன் பாண்டே உட்பட மொத்தம் 7 ராணுவ வீரர்கள் அதில் சிக்கிக் கொண்டனர்.இதையடுத்து அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. இந்நிலையில் பனிச் சரிவில் சிக்கிய 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக ராணுவம் தெரிவித்து உள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு உள்ளதாகவும் இந்திய ராணுவ வீரர் தெரிவித்தார். அதன்பின் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர், பாதுகாப்பு துறை அமைச்சர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *