• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவரா -உங்களுக்குத்தான் இந்த வேலை வாய்ப்பு

ByA.Tamilselvan

Jun 1, 2022

கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றம் Member பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.விண்ணப்பதாரர்கள் கட்டாயம் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
வரும் ஜூன் 8ம் தேதி விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு அமர்வுக்கு ரூ.2,000/- முதல் ரூ. 5,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் என அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதார்கள் Postal, telegraph, telephone service போன்ற பணி சார்ந்த துறைகளில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். இப்பணிக்கு அதிகபட்சமாக 63 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
01 இடங்கள் காலியிடங்கள் உள்ளது. விண்ணப்பத் தாரர்கள் Personal Interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.
விண்ணப்பபடிவத்தினை பதிவிறக்கம் செய்து அதனை தவறில்லாமல் பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
தபால் செய்ய வேண்டிய முகவரி
The Chairman,
District Legal
Services Authority, District Court Campus,
Kanniyakumari.
இந்த பணிகுறித்து தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ இணையதள முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது
https://districts.ecourts.gov.in/tumkur-onlinerecruitment#
இந்த லிங்கை க்ளிக் செய்யவும்
இந்தபணிக்கு விண்ணப்பிக்க கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்
https://districts.ecourts.gov.in/sites/default/files/Proforma%20for%20Advertisement_0.pdf
விண்ணப்பிக்க மிக குறைவான நாட்களே இருப்பதால் உடனடியாகவிண்ணப்பித்து பயன்பெறலாம்.