• Wed. Apr 24th, 2024

இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தில் வேலை அறிவிப்பு

ByA.Tamilselvan

Jun 2, 2022

இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் – (Hindustan Aeronautics Limited-HAL) நிறுவனத்தில் PGT Computer Science , Librarian Cum Teacher , Lower Division Clerk ஆகிய மூன்று பணிகளுக்கு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுபர்கள் கான்பூரில் வேலையில் அமர்த்தப்படுவார்கள்.
வருகிற ஜூன் 20 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந் நிறுவனத்தில் உள்ள 3 விதமான பணிகளுக்கு சம்பள விபரம் அறிவிக்கப்பட்டுள்ளன. PGT Computer Science ரூ. 16,000 /- மாதச் சம்பளம், Librarian Cum Teacher (Primary) ரூ. 16,000 /- மாதச் சம்பளம்
Lower Division Clerk ரூ. 15,000 /- மாதச் சம்பளம் கிடைக்கும். நீங்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு 2 வருட அனுபவம் இருக்கவேண்டும். 25 / 06 / 2022 தேதியின் படி 40 வயதிற்குள் இருப்பவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள்.
இப்பணிக்கு விண்ணப்பத் தாரர்கள் Personal Interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.
இந்தநிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தை தெரிந்து கொள்ள
https://hal-india.co.in/
என்ற இணைப்பை கிளிக் செய்யவும்.
இந்த பணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பினையும்,விண்ணப்படிவத்தையும் கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளமுடியும்
https://hal-india.co.in/Common/Uploads/Resumes/1590_CareerPDF1_Announcement%20of%20vacancy%20in%20HAL%20vidyalaya%20kanpur.pdf
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
The Secretary
H.A.L. Education Society
C/o H.A.L. Vidyalaya,
H.A.L. Township, G.T. Road, Kanpur – 208007

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *