
கூகுள் குரோம் பயனாளர்கள் உடனடியாக லேட்டஸ்ட் வெர்ஷனை அப்டேட் செய்துகொள்ளுமாறு அதி தீவிர எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கூகுள் குரோமில் பல பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன எனவும், குறிப்பிட்ட கம்ப்யூட்டரை இலக்காக கொண்டு ரிமோட் அட்டார்கர்ஸ் தாங்கள் நினைத்ததை செயல்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கணினியில் உள்ள தனிப்பட்ட தகவல்களை அவர்களால் எளிதில் பெற முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த சிக்கல்களை சரிசெய்ய கூகுள் ஏற்கெனவே சாஃப்ட்வர் அப்டேட்டை வெளியிட்டுள்ளது. 22வகையான பாதுகாப்பு குறித்த பிரச்னைகள் சரிசெய்யப்பட்டு லேட்டஸ்ட் குரோம் அப்டேட் வெளியிடப்பட்டுள்ளதால் பயனர்கள் உடனடியாக கூகுள் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் வெர்ஷனை அப்டேட் செய்துகொள்ளுமாறும் இந்தியன் கம்ப்யூட்டர் எமர்ஜன்சி ரெஸ்பான்ஸ் டீம் கோரிக்கை விடுத்துள்ளது.
