விருதுநகரில் திமுக அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி தலைமையில் விருதுநகரில் இன்று அதிமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரிகளை உடனடியாக குறைக்க வேண்டும், அனைவருக்கும் பொங்கல் பரிசுத்தொகை கொடுக்க வேண்டும், வெள்ளத்தால் பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு போதுமான இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக சார்பாக தமிழகம் முழுவதிலும் மாவட்ட தலைநகரங்களில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது.
அதன்படி விருதுநகர் மேற்கு மாவட்ட அண்ணா திமுக கழகம் சார்பாக விருதுநகர் மேற்கு மாவட்ட அண்ணா திமுக கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே. டி. ராஜேந்திரபாலாஜி தலைமையில் விருது நகரில் இன்று காலை திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுகவிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ், சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன், முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய கழகச் செயலாளர்கள்.
நகர கழக செயலாளர்கள், பேரூர் கழக செயலாளர்கள், விருதுநகர் மேற்கு மாவட்டத்தின் அனைத்து சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். படம் விளக்கம், திமுக அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர் கே. டி .ராஜேந்திர பாலாஜி தலைமையில் விருது நகரில் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.