• Thu. Apr 25th, 2024

+2 தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? மத்திய பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு!

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (CISF) காலியாக உள்ள Constable/Fire பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 1149 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.70 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பிக்கலாம்!

நிர்வாகம் : மத்திய தொழில் பாதுகாப்புப் படை (CISF)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடம் : 1149
பணி : Constable/Fire
கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 18 முதல் 23 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.21,700 முதல் ரூ.69,100 மாதம்

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 04.03.2022 தேதிக்குள் https://www.cisfrectt.in/ எனும் இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : பொது, ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100
எஸ்சி, எஸ்டி, பெண் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் Physical Efficiency Test (PET), Physical Standard Test (PST), and Written Examination under OMR/Computer Based Test(CBT) Mode, Document Verification (DV) and Medical Examination (DME/RME) அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.cisf.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *