• Tue. Mar 3rd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

உலக அளவில் டாப் 50பட்டியலில் அரபிக் குத்து

ByA.Tamilselvan

Dec 2, 2022

பீஸ்ட். படத்தின் அரபிக்குத்து பாடல் பல்வேறு சாதனை படைத்துள்ள நிலையில் ஆப்பிள் மியூசிக் நிறுவனத்தின் டாப் 50 பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
பொங்கல் அன்று வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது.இந்நிலையில் விஜய் நடித்த பீட்ஸ் படத்தின் “அரபிக்குத்து” பாடல் உலக அளவில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. ஆப்பிள் மியூசிக் நிறுவனம் 2022ல் அதிகம் கேட்கப்பட்ட பாடல் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் டாப்.50 பட்டியலில் ஒரே ஒரு தமிழ் பாடல் மட்டுமே இடம் பெற்றுள்ளது. அனிருத் இசையமைத்து பாடிய அரபிக்குத்து இந்த பட்டியலில் 28 வது இடத்தை பிடித்துள்ளது. மேலும் இந்தியாவின் பிரபலமான பாடகர் பட்டியலில் ஏ.ஆர்.ரகுமான், அனிருத் ஆகியோர் முறையே 6 மற்றும் 7 வது இடங்களை பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.