

11ம் மாணவர்களுக்கு தமிழ்மொழி இலக்கிய திறனறித்தேர்வு தமிழக அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.
தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு அக்.1ம் தேதி நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. தேர்வுக்கு தமிழ் தெரிந்த 11ம் வகுப்பு மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆக.22 முதல் செப்.9 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வில் 10 ம் வகுப்பு தமிழ் பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.இதில் 1500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் 12ம் வகுப்பு முடிக்கும் வரை மாதம் ரூ1500 வழங்கப்படும்.
