
மாவட்ட அளவில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில், தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்கள் வென்ற மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள நகரியில், அமைந்துள்ள கல்வி சர்வதேச பொதுபள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் நடந்த சதுரங்க போட்டியில் தங்கப் பதக்கங்கள் மற்றும் வெங்கல பதக்கங்கள் பரிசு பெற்று வந்தனர். சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் மதுரை பாண்டுக்குடி ஸ்ரீ லட்சுமி நாராயணன் வித்யாலயா பள்ளியில் நடைபெற்றது. இதில், மதுரை மாவட்டம், சோழவந்தான் நகரில் உள்ள கல்வி சர்வதேச பொதுப்பள்ளி மாணவர்கள் அனுஸ்ரீ, பிரபாகரன், யஸ்வந்த், கிளாட்ஸன் மற்றும் தருண் ஆகியோர் போட்டியில் பங்கேற்றனர். இவர்கள், மூன்று தங்கப் பதக்கங்களும், இரண்டு வெண்கலபதக்கமும் வெற்றி பெற்றனர்.
சாதனை படைத்த மாணவர்களை கல்வி சர்வதேச பொதுப்பள்ளியின் தலைவர் செந்தில்குமார், தாளாளர் மற்றும் பள்ளி முதல்வர் பாராட்டி பரிசுகளை வழங்கினர்.
