மதுரை மண்டல அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார்துறை வேலைவாய்ப்பு மற்றும் தொழில் பயிற்சி முகாமில் 570 நபர்கள் கலந்து கொண்டதில் 179 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் மற்றும் 80 நபர்களுக்கு தொழிற்பயிற்சி பெறுவதற்கான ஆணைகளை மாற்றுத்திறனாளிநலத்துறை அரசு செயலர் சிஜி தாமஸ் வைத்தியன், வழங்கினார்.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் மாற்றுத்திறனாளிகள்நலத்துறை, வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் திறன் மேம்பாட்டு கழகத்தின் மண்டல அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு மற்றும் தொழில் பயிற்சி முகாமினை மாற்றுத்திறனாளி நலத்துறைஅரசு செயலர் சிஜி தாமஸ் வைத்தியன் துவக்கி வைத்து, 179 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் மற்றும் 80 நபர்களுக்கு தொழிற்பயிற்சி பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார்.
தொடர்ந்து, மாற்றுத்திறனாளி நலத்துறை அரசு செயலர் சிஜி தாமஸ் வைத்தியன், தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், பல்வேறுதிட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.அதன்படி, மதுரை மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தனியார் துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்திடவும், மாற்றுத்திறனாளிகளின் திறனை மேம்படுத்தும் வகையில் பல்வேறு இலவச தொழிற்
பயிற்சிகளை வழங்கிடவும் மாற்றுத்திறனாளிகளுக்கானதனியார் துறை வேலை
வாய்ப்பு மற்றும் தொழில் பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, இன்றைய தினம் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார்
துறை வேலைவாய்ப்பு மற்றும் தொழில் பயிற்சி முகாமில் 71 தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுடைய நிறுவனங்களில்பல்வேறு பிரிவுகளில் பணியாற்றுவதற்கு தகுதியான நபர்களை தெரிவு செய்யும் சிறப்பு முகாம் நடைபெற்றது. மதுரை மண்டலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறன் கொண்ட படித்த ஆண்கள், பெண்கள் ஏராளமானோர் தங்களுடைய கல்விச் சான்றிதழ்களுடன் இம்முகாமில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தொடர்ந்து, மண்டல அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்புமற்றும் தொழில் பயிற்சி முகாமில், மதுரை மாவட்டத்தை சேர்ந்த 254 நபர்கள், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 54 நபர்கள், இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 72 நபர்கள், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 65 நபர்கள், தேனி மாவட்டத்தை சேர்ந்த 25 நபர்கள், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 83 நபர்கள், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 17 நபர்கள் என மொத்தம் 570 நபர்கள் கலந்து கொண்டனர். இம்முகாமில் கலந்து கொண்ட 570 நபர்களில் தகுதியான நபர்களை தேர்வு செய்து 179 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளும் மற்றும் 80 நபர்களுக்கு தொழிற்பயிற்சி பெறுவதற்கான ஆணைகளும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற தனியார் துறை வேலைவாய்ப்புமற்றும் தொழில் பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாற்றுத்திறனாளி நலத்துறை அரசு செயலர் சிஜி தாமஸ் வைத்தியன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா,உதவி ஆட்சியர் (பயிற்சி) வைஷ்ணவி பால்,துணை இயக்குநர் ரவீந்தரநாத்சிங் , உதவி இயக்குநர் ஜெகதீசன்,
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன், தொழில் வழிகாட்டி அலுவலர் வெங்கடசுப்பிரமணியன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.