• Tue. Oct 7th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

புதிய அதிமுக நிர்வாகிகள் நியமனம்.., முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியிடம் வாழ்த்து…

Byதரணி

Sep 28, 2023

விருதுநகர் மாவட்டத்தில் புதிய அதிமுக நிர்வாகிகள் நியமனம் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியிடம் வாழ்த்து பெற்றனர்.
சிவகாசி, செப். 28 : விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் புதியதாக அதிமுக நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அதிமுக கழக பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக அமைப்பு செயலாளரும் விருதுநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திரபாலாஜி பரிந்துரையின் பேரில் விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் புதிய நிர்வாகிகளை நியனம் செய்துள்ளார். அதன்படி அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளராக எஸ்.என். பாபுராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோன்று விருதுநகர் மேற்கு மாவட்ட கழக துணை செயலாளராக வேண்டுராயபுரம் சுப்பிரமணியன், விருதுநகர் மேற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளராக பலராம் நியமிக்கப்பட்டுள்ளார்.

விருதுநகர் மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளராக பிலிப்வாசு, மாவட்ட மாணவரணி செயலாளராக ராஜபாளையம் ராஜ்குமார், மாவட்ட கலைப்பிரிவு செயலாளராக என்.சி. ஓ.காலனி மாரிமுத்து, மாவட்ட இலக்கிய அணி செயலாளராக என். எம். ரமணா, பொதுக்குழு உறுப்பினராக ராஜபாளையம் ஜான்சன், மாவட்ட சிறுபான்மையினர் நலப் பிரிவு செயலாளராக சையது சுல்தான், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர்களாக வெற்றி, கலைச்செல்வி, மாவட்ட விவசாய பிரிவு பொருளாளராக ராஜபாளையம் சௌந்தரராஜன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளராக திருத்தங்கள் முருகேசன், பழனிமுருகன். ராஜபாளையம் பாலசுப்பிரமணியராஜா. சிவகாசி எஸ்.புதுப்பட்டி ஈஸ்வரன், துணைச் செயலாளராக செண்பகவேல், காசிராஜ், கருப்பசாமி, காமராஜ், பழனிவேல், சோலைமலை, குருசாமி, பொருளாளராக கோட்டைபாண்டி. மாவட்ட புரட்சி தலைவி பேரவை தலைவராக கமல்குமார், துணைத்தலைவராக காசி, இணைச் செயலாளராக முத்துக்குமார், மணிகண்டன், துணைச் செயலாளராக தங்கப்பாண்டியன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணை தலைவர்களாக சரவணன், தினேஷ்பாபு, இணைச் செயலாளராக சிவா, பொருளாளராக வடிவேல் சித்தன், மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவராக ராஜபாளையம் சுபா, துணைச் செயலாளராக ராஜபாளையம் கனகலட்சுமி. விஜயா, மாவட்ட மாணவரணி துணைச் செயலாளராக ஜெயராம், கௌதமன், பொருளாளராக மாரிக்கனி மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணைத் தலைவராக லாசர், இணைச் செயலாளராக முருகன், துணைச் செயலாளராக குமார், வெள்ளிராஜ், பொருளாளராக வெற்றிவேல், மாவட்ட சிறுபான்மை பிரிவு நலப் பிரிவு துணைத் தலைவர்களாக மிக்கேல்ராஜ், சாகுல் ஹமீது, இணைச் செயலாளர்களாக முகமதுஆசிப்., துணைச் செயலாளர் ஜலீல், முகமது காலிப், பொருளாளராக ஹிதாயத்துல்லா, மாவட்ட மீனவர் அணி துணைச் செயலாளராக முருகேசன் என்ற போஸ், மாவட்ட மருத்துவ அணி பொருளாளராக டாக்டர் பிரதீஸ்.மாவட்ட இலக்கிய அணி தலைவராக மரியதாஸ், இணைச் செயலாளராக செந்தில்குமரன், துணை செயலாளராக ராஜேஷ்கண்ணா, மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி துணைத்தலைவராக ஞானகிரி, மாவட்ட பொருளாளராக முத்துவிஜயன், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை இணைச் செயலாளராக விக்னேஷ் துணைச் செயலாளராக பிரபு, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத் தலைவராக மாயாண்டி, இணை செயலாளராக பேச்சிமுத்து, துணை செயலாளராக வல்லவராஜா, ஜெஸ்வந்த்ராவ், கணேசன், கருப்பசாமி, செல்வகுமார், மாவட்ட வர்த்தக அணி துணைத் தலைவராக ராமசுப்பிரமணியன், துணைச் செயலாளராக தங்கமணி, மாவட்ட கலைப்பிரிவு இணைச் செயலாளராக சரவணன் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.