நாளை பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, திருவண்ணமாலைக்கு நாளை சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சென்னை கடற்கரை மற்றும் திருவண்ணாமலை இடையே செப்டம்பர் 29 சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சென்னை கடற்கரை மற்றும் வேலூர் கண்டோன்மென்ட் இடையே இயக்கப்படும் விரைவு ரயில் சேவை வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடற்கரையில் இருந்து செப்டம்பர் 29ஆம் தேதி இரவு 6 மணிக்கு புறப்படும் மெமு ரயில் நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். இந்த ரயில் மறு மார்க்கமாக செப்டம்பர் 30ம் தேதி திருவண்ணாமலையிலிருந்து அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு காலை 9.05 மணிக்கு கடற்கரை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பௌர்ணமி கிரிவலம் திருவண்ணாமலைக்கு நாளை சிறப்பு ரயில்..!
