அமைச்சர் உதயநிதியைப் பதவி நீக்கம் செய்யக் கோரி, விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பினர் ஆளுநரிடம் மனு அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2-ம் தேதி சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர்கள் உதயநிதி மற்றும் சேகர்பாபு பங்கேற்றனர். இதனையடுத்து இவர்களை பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தி, விஸ்வ ஹிந்து பரிசத் தேசிய செயல்தலைவர் அலோக்குமார், தமிழக ஆளுநர் ரவியிடம் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் இந்த மாநாட்டில் பங்கேற்றது அமைச்சர்களின் பொறுப்பற்ற செயல்.
மேலும், அமைச்சரின் இந்த பேச்சு வெறுப்பை பரப்பவும், பகைமையை உருவாக்கவும் கூடியது என அச்சம் தெரிவித்தனர். மேலும் இது நேரடியாக அரசியல் சாசனத்தை மீறும் செயல் என்றும் கடுமையாக சாடியுள்ளார்.
அமைச்சர் உதயநிதியை பதவிநீக்கம் செய்யக் கோரி ஆளுநரிடம் மனு..!
