• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மாவட்டங்களுக்கு தேமுதிக பொறுப்பாளர்கள் நியமனம்

அடுத்த மாதம் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தேமுதிக தனித்துப் போட்டியிடுவதாக அக்கட்சி அறிவித்திருந்தது.

இந்நிலையில், தேமுதிக சார்பில் 4 பொறுப்பாளர்கள் நியமனம் செய்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

கட்சியின் துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் அவர்களை வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களுக்கும், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களுக்கு கட்சியின் துணை செயலாளர் பார்த்தசாரதி நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் அவைத் தலைவர் வி.இளங்கோவனை காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ் அவர்களை கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களுக்கு தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று ஊரக உள்ளாட்சி தேர்தல் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.