• Sat. Apr 20th, 2024

வேளாண் படிப்புகளுக்கு ஜூன் 9 வரை விண்ணப்பிக்கலாம்

ByA.Tamilselvan

May 10, 2023

வேளாண் படிப்புகளுக்கு ஜூன் 9 வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வேளாண் மற்றும் மீன்வளப் படிப்புகளுக்கு நடப்பாண்டு முதல் ஒரே விண்ணப்பம் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படவுள்ளது.வேளாண் மற்றும் மீன்வளப் படிப்புகளுக்கு இன்று முதல் ஜூன் 9-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வேளாண் மற்றும் மீன்வளப் படிப்பு உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் சேர http://tnau.ucanapply.com என்ற தளத்தில் இன்று முதல் ஜூன் 9 ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.பொதுப்பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.500 எனவும் பட்டியலினத்தவருக்கு  கட்டணம் ரூ.250 எனவும் நிர்ணயக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *