பெங்களூருவில் தமிழ் அறக்கட்டளை என்ற அமைப்பு சார்பாக தமிழை கொண்டாடுவோம் என்ற நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சியில் விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை காணொளி மூலமாக கலந்து கொண்டார். தாய்மொழியில் சிந்திக்கின்ற குழந்தைகளின் திறன் எப்போதும் மேம்பட்டதாக இருக்கும். தாய்மொழியான தமிழில் படித்ததால் தான் என்னால் அறிவியலில் சாதனை படைக்க முடிந்தது. இதனை நான் உங்களிடம் பெருமையாகக் கூறிக் கொள்கிறேன். நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்ப பல நாடுகள் முயற்சி செய்தது.
ஆனால் அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.நிலவுக்கு சந்திராயன் செயற்கைக்கோள் முதல் முயற்சியிலேயே அனுப்பி வெற்றி பெற்றோம். மங்கள்யான் விண்கலத்தை அனுப்பினோம். தமிழர்களுக்கு இயல்பாகவே அறிவாற்றல் அதிகமாக உள்ளது. தாய்மொழியில் படிக்கும்போது சுயமாக சிந்திக்கும் திறன் மேம்படுகிறது. அந்த சுயசிந்தனை கூர்மையான அறிவுக்கு அடித்தளமாக அமையும். தமிழில் படித்தவர்களால் எப்போதும் எதையும் சாதிக்க முடியும் என்று அவர் பேசினார்.