
சென்னை தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் கையில் வித்தியாசமான உயிரினத்துடன் மூன்று நபர்கள் சந்தேகத்திற்கு இடமாக நிற்பதாக சென்னை வனத்துறையினருக்கு தகவல் வந்தது தகவலின் அடிப்படையில்,
தாம்பரம் வன உயிரின குற்றத்தடுப்பு பிரிவு காவலர்கள் மற்றும் வனத்துறை அதிகாரி வித்யாபதி தலைமையிலான காவலர்கள் விரைந்து சென்று அவர்களை மடக்கிப் பிடித்தனர்.

அப்பொழுது அவர்களிடம் இருந்து தாய் மற்றும் குட்டி என இரண்டு இரும்பு திண்ணிகள் மீட்கப்பட்டது. அதுமட்டுமின்றி அவர்கள் பயன்படுத்திய ராயல் என்ஃபீல்டு மற்றும் பல்சர் இருசக்கர வாகனங்கள் ஆட்டோ மற்றும் எறும்புத்தின்னி கொண்டு வந்துள்ளது உண்மைதானா என ஆய்வு செய்ய வந்த வாங்கும் நபரின் உதவியாளரையும் சேர்த்து நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டு வன காவல் நிலையம் அழைத்துவரப்பட்டு விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கேரள மாநிலத்தைச் சார்ந்த நபர் ஒருவரின் அறிவுறுத்தலின் பேரில் திருவொற்றியூர் பகுதியைச் சார்ந்த மூன்று நபர்கள் ஆந்திராவிற்கு சென்று சென்னை பெருங்களத்தூர் பகுதியைச் சார்ந்த நபரிடம் 40 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்வதற்காக எறும்புத்தின்னி வாங்கி வந்தது தெரிய வந்தது.
மேலும் விசாரணையில் எறும்பு தின்னியின் செதில் பகுதி சைனாவின் பிரசித்தி பெற்ற புத்தர் சிலை செய்வதற்கும் அலங்கார பொருட்கள் செய்வதற்கும் பயன்படுத்தப்படுவதால், இந்திய எறும்புத்தின்னிகள் அதிக விலை கொடுத்து வாங்குவதாகவும், அதன் மாமிசம் ஆண்மை குறைவு கேன்சர் போன்ற நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்துவதாகவும் கூறி விற்பனை செய்ய வந்தது தெரிய வந்தது.
மேலும் கேரளாவில் இருந்து இவர்களை அனுப்பிய நபர் யார் ஆந்திராவில் யாரிடமிருந்து வாங்கப்பட்டது. 40 லட்ச ரூபாய் கொடுத்து வாங்குவதற்கு யார் தயாராக இருந்தார் என்பது குறித்து வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
