கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்து தோவாளை அருகே உள்ள வட்டார போக்குவரத்து துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடைபெற்று வருகிறது. இதில் ஒரு மணி நேரத்தில் கணக்கில் வராத 1 லட்சத்தி 18 ஆயிரத்தி 950 ரூபாய் சிக்கியது தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சோதனை சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நேற்றும் இன்றும் சோதனை நடத்தியதில் பல ஆயிர கணக்கான லஞ்ச பணங்கள் கைபற்றினார்கள். அதனை தொடர்ந்து இன்று மாலை நாகர்கோவிலை அடுத்து தோவாளை அருகே உள்ள வட்டார போக்குவரத்து துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடைபெற்று வருகிறது. DSP பீட்டர் பால் தலைமையிலான அதிகாரிகள் சோதனை நடத்திய ஒரு மணி நேரத்தில் கணக்கில் வராத 1 லட்சத்தி 18 ஆயிரத்தி 950 ரூபாய் பறிமுதல் செய்துள்ளனர்.
இது தொடர்பாக வட்டார போக்குவரத்து துறை அதிகாரி சந்திரசேகரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. சோதனைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தொடர்ந்து அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருவதால் பலவேறு துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.