• Sun. Sep 24th, 2023

ஆண்டுதோறும் கொரோனா தடுப்பூசி: ஜோ பைடன்

ByA.Tamilselvan

Sep 8, 2022

அமெரிக்கர்களுக்கு ஆண்டு தோறும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரசால் உலகளவில் பெரும் பாதிப்புக்குள்ளான நாடு அமெரிக்கா. அங்கு 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆண்டுதோறும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடப்படும் என்ற அறிவிப்பை அந்த நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன் வெளியிட்டுள்ளார். இதுபற்றி அவர் விடுத்துள்ள அறிக்கையில், “நாங்கள் 2 ஆண்டுகளில் முதல் முறையாக ஒரு புதிய தடுப்பூசியை தொடங்குகிறோம். இது புதிய அணுகுமுறை ஆகும். பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு ஆண்டுக்கு ஒரு டோஸ் போடப்படும். கொரோனா வைரஸ் தொடர்ந்து மாறி வருவதால், ஆதிக்கம் செலுத்துகிற உருமாறும் வைரஸ்களை இலக்காக கொண்டு, நமது தடுப்பூசிகளை புதுப்பிக்க முடியும். வருடாந்திர காய்ச்சல் தடுப்பூசியைப் போலவே இந்த தடுப்பூசியை தொழிலாளர் தினத்துக்கும், ஹாலோவீனுக்கும் (இது அக்டோபர் மாதம் வரும்) இடையே நீங்கள் அதைப் போட்டுக்கொள்ள வேண்டும். இது பாதுகாப்பானது. இதைப் பெறுவது எளிது. இது இலவசம்” என தெரிவித்துள்ளார். இந்த பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை பைசர்-பயோஎன்டெக் நிறுவனங்கள் கூட்டாக உருவாக்கி உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *