• Tue. Aug 25th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி கோவிலில் வருடாபிஷேக விழா..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி தாதம்பட்டி ஒட்டான்குளம் குளக்கரையில்எழுந்தருளி அருள் பாலிக்கும் பதினெட்டாம்படி வெங்கல கருப்பணண சாமி கோவிலில் வருடா அபிஷேக விழா நடைபெற்றது.

காலை 6மணி முதல் 9 மணி வரை யாகசாலை பூஜை செய்யப்பட்டது. அதன் பின் கடம் புறப்பாடாகி கோயிலை வலம் வந்து கருப்பணண் அருவாளுக்கு பட்டர் வெங்கடேஷ் பாபு தலைமையில் புனித நீர் ஊற்றி வருடாபிஷேகம் செய்யப்பட்டது.

இதில் பேரூராட்சி தலைவர் மு பால்பாண்டியன், துணைத் தலைவர் கார்த்திக், கவுன்சிலர் ஜெயகாந்தன், கிராம தலைவர் மாணிக்கம், மற்றும் தாதம்பட்டி கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதன் ஏற்பாடுகளை மருந்து கடை கருப்பையா குடும்பத்தினர் செய்திருந்தனர்.