• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளியில் ஆண்டுவிழா..,

ByP.Thangapandi

Feb 23, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அமைந்துள்ள நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளியில் சுமார் 600 க்கும் அதிகமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.,

இந்த பள்ளியின் 79வது ஆண்டுவிழா இன்று பள்ளி வளாகத்தில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது, உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன், சமூக ஆர்வலர் ஸ்டார் குருசாமி மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, பேச்சுப்போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மழலைகளுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தினர்.,

தொடர்ந்து எல்.கே.ஜி முதல் 5ஆம் வகுப்பு வரை இப்பள்ளியில் பயிலும் மாணவ மழலைகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன., கலை நிகழ்ச்சியில் பாடலுக்கு நடனமாட மழலைகளுக்கு சைகை மூலம் ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.