• Sat. Oct 10th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

வீரமாகாளியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா..,

ByKalamegam Viswanathan

Feb 24, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேட்டையில் உள்ள அருள்மிகு வீரமாகாளி அம்மன் கோவில் பத்தாம் ஆண்டு மாசித் திருவிழா காப்பு கட்டுதளுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பூச்சொரிதல் விழா கோவில் முன்பு நடைபெற்றது. பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் பூத்தட்டு ஏந்தி பேட்டை கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் ஊர்வலமாக வந்தனர் முன்னதாக வீரமாகாளியம்மன் சர்வ அலங்காரத்தில் பொதுமக்களுக்கு காட்சியளித்தார். பெண்கள் பொது மக்கள் வரிசையில் நின்று வீரமாகாளியம்மனை தரிசனம் செய்து சென்றனர் ஏற்பாடுகளை பேட்டை கிராமத்தினர் செய்திருந்தனர்.