• Wed. Mar 19th, 2025

அண்ணாமலைக்கு சுய புத்தி கிடையாது… காயத்ரி ரகுராம் வர்ணனை!

குமரியில் ராஜாவூரை அடுத்துள்ள பகுதியில் உள்ள லயோலா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மகளிர் தினம் கூட்டத்திற்கு திரைப்பட தயாரிப்பாளரும், கலப்பை மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளரும் ஆன பி.டி.செல்வகுமார் தலைமை தாங்கினார். நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திரைப்பட நடிகையும்,நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் மகிளிர் தின விழாவில் சிறப்புரை ஆற்றினார்.

நிகழ்விற்கு பின் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு காயத்ரி பதில்..,

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது என்பதை முன்னாள் முதல்வர் ஐயா எழப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். தமிழகத்தில் மூன்று மொழி என்ற பெயரில் இந்தியை திணிக்க மத்திய அரசு முயல்கிறது. தமிழகத்தில் பாஜக செல்வாக்கே இல்லாத கட்சி. நேரத்திற்கு ஒன்றை சொல்கிறார்கள். அண்மையில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா. தமிழகத்திற்கு வந்து தமிழை ஆதரித்து பேசியவர், டெல்லி சென்றதும் மாற்றி பேசிகிறார். டெல்லியில் சொல்லி அனுப்புவதை தமிழகத்திற்கு வந்து,அண்ணாமலை அவரது கருத்துப் போல் பேசிகிறார். அண்ணாமலைக்கு சுய புத்தி கிடையாது. மத்திய பாஜக சொல்வதை தமிழகத்திற்கு வந்து உளறுவது தான் அண்ணாமலையின் செயல் என நடிகை காயத்ரி ரகுராம் அவரது பேட்டியில் வெளிப்படுத்தினார்.