• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

கைக்குழந்தையுடன் அங்கன்வாடி ஊழியர்கள் கைது..,

தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த மூன்று நாட்களாக விருதுநகர் மாவட்டம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 1200கும் மேற்பட்ட பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

இவர்கள் காலையில் கைது செய்து மாலையில் விடுவிக்கப்படுகின்றனர், இதில் ஒரு சில பெண்கள் தங்கள் கைக்குழந்தையுடன் வந்தாலும் அவர்களும் கைக்குழந்தையுடன் வேண்களில் ஏற்றி கைது செய்து வருகின்றனர். இது குறித்து மாநில பொருளாளர் சுப்புக்களை கூறுகையில்” தமிழக முதல்வர் தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி நாங்கள் போராட்டம் நடத்தி வருகிறோம், ஆனால் முதல்வர் எங்களது கோரிக்கைகளை செவி கொடுத்து கேட்கவில்லை. போராட்டத்தில் பங்குபெறும் சில பெண்கள் தங்கள் கைக்குழந்தையுடன் வந்தாலும் அவர்களும் கைது செய்யபடுகிறார்கள், இப்படி இந்த அரசு சிறிது கூட இரக்கமின்றி நடந்துகொள்கிறது என்று வேதனையுடன் கூறினார்.

அப்போது ஆர்ப்பாட்டம் செய்த பெண்கள் “விடியல் ஆட்சி என்று சொல்லி விடியாமல் இருக்கின்றோம்” என்று கோஷமிட்டனர்.