• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதனப் போராட்டம்..,

மத்திய அரசின் விலைவாசி உயர்வு மற்றும் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து, தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள எரசக்கநாயக்கனூரில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், கம்பம் சட்டமன்ற உறுப்பினருமான கம்பம் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறிய மத்திய அரசைக் கண்டித்து அவர் உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தின் போது, உயர்ந்து வரும் எரிவாயு விலையைக் குறிக்கும் வகையில், கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து திமுகவினர் நூதன முறையில் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். மத்திய அரசுக்கு எதிராகப் பல்வேறு கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுகவின் கூட்டணிக் கட்சிகளான:
​இந்திய தேசிய காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,
​ஆதித்தமிழர் பேரவை ஆகிய கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.