கன்னியாகுமரியில் மக்கள் நெருக்கமாக வசிக்கும் பகுதி என்பதை கடந்து சுற்றுலா விடுதிகளும் அதிகமாக உள்ள பகுதியில். ஆபத்தான நிலையில் இருக்கும்
மின் கம்பம் குறித்து அந்த பகுதி மக்கள்.

கன்னியாகுமரியில் உள்ள மின் வினியோகம் அலுவலக பெண்
பொறியாளரிடம் பல முறை புகார் தெரிவிக்கும் போதெல்லாம். போல்(கம்பம்)இருப்பில் இல்லை புதிய போல்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறைக்கு தகவல் கொடுத்துள்ளோம்.
விரைவில் வந்துவிடும் என சம்பந்தப்பட்ட பெண் பொறியாளர் தெரிவிக்கிறாரே அன்றி ஆபத்தை உண்டாக்க காத்திருக்கும் மின் சாரத்தை கடத்தும் இணைப்பு கொண்ட துண்டு,துண்டாக அதில் இணைக்கப்பட்டிருக்கும். ஒயர்கள் மின் கம்பத்தின் உடைந்த பாகங்களை தாங்கி நிற்கும் நிலையில்,
கன்னியாகுமரியில் கடந்த மூன்று தினங்களாக காற்று,மழை தொடரும் நிலையில். மக்கள் பெரும் எண்ணிக்கையில் வசிக்கும் இல்லங்கள் இருக்கும் பகுதியில்.
மின் கம்பம் விழுந்து பாதிப்பு ஏற்பட்ப் பின் தான் சம்பந்தப்பட்ட பொறியாளர் நடவடிக்கை எடுப்பாரா.? அந்த பகுதியில் வசிக்கும் மக்களின் கேள்வியாக இருக்கிறது. வரும் முன் காப்போம்
என்பது தான் பொது நீதி.
இந்த பொது கருத்தை கன்னியாகுமரி மின் பகிர்வு பிரிவு அதிகாரிக்கு யார்
உணர்த்துவார்கள்.