• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீ சந்தமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்..,

ByP.Thangapandi

Jul 16, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வடுகபட்டியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோவில் புதியதாக கோவில் எழுப்பப்பட்டு, சுமார் 20 அடியில் உயரத்தில் கோபுரங்கள் எழுப்பி கும்பாபிஷேக விழா இன்று விமர்சியாக நடைபெற்றது.,

முன்னதாக மகா கணபதி ஹோமத்துடன் யாக சாலை பூஜைகள் தொடங்கப்பட்டு, முதல் கால பூஜைகள், இரண்டாம் கால யாகசாலை பூஜைகள், மூன்றாம் காலயாகசாலை பூஜைகளை தொடர்ந்து பூர்ணாகுபதி நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மேள வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடாகி கோவிலை சுற்றிய பின்பு கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.,

அதனை தொடர்ந்து கோவில் கருவறையில் அருள்மிகு சந்தன மாரியம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.,

இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து அம்மனை வழிபட்டனர்.,