• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

கருப்பையா எம்.எல் ஏ முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த அ.ம.மு.க நிர்வாகிகள்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில்அம்மா மக்கள் முன்னேற்ற கழக தொழில் நுட்ப அணி மாவட்ட தலைவர் ரஜினி பிரபு தலைமையில் தி.மு.க ஆதிராவிட காலனி கிளைச் செயலாளர் மூர்த்தி
மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக ரிஷபம் ஊராட்சி செயலாளர் சிவசாமி உள்பட சுமார் 25 நிர்வாகிகள் சோழவந்தானில் வெளியான ஜனநாயகன் திரைப்படம் பார்த்த பின்பு கருப்பையா எம் .எல் .ஏ., முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர்.

உடன் பேரூர் செயலாளர் பசு மணியன், ஒன்றிய செயலாளர்கள் தமிழன் தாமு,கிருஷ்ணமூர்த்தி,ஒன்றிய இணைச் செயலாளர் முத்து, ஒன்றிய பொருளாளர் முத்துசாமி,செயற்குழு உறுப்பினர் அன்புச்செல்வம் ஆகியோர் இருந்தனர்.