• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

ரஷியாவிற்கு, அமெரிக்கா எச்சரிக்கை

ByA.Tamilselvan

Sep 27, 2022

உக்ரைன் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்துவதை தவிர்க்க முடியாது அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசர் ஜேக் சல்லிவன், உக்ரைன் மீது அணு ஆயுத தாக்குதலை நடத்துப் போவதாக தெரிவித்துள்ள ரஷியாவிற்கு அமெரிக்கா தீர்மானமாக பதிலளிக்கும் என்றார். நான் தெளிவாகச் சொல்கிறேன், ரஷ்யா இந்த எல்லையைத் தாண்டினால், பேரழிவு விளைவுகள் ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
. இது குறித்து தெரிவித்த சல்லிவன், உக்ரைனில் நடைபெறும் வாக்கெடுப்பு வலிமை அல்லது நம்பிக்கையின் அடையாளங்கள் அல்ல என்றார். இது ரஷிய ராணுவத்திற்கான திரும்ப அழைப்பு என்றும், ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் இருந்து அவர்கள் ஓட முயற்சிக்கிறார்கள் என்பதை காட்டுகிறது எனவும் அவர் கூறினார். உக்ரைன் விவகாரத்தில் ரஷியாவும் புதினும் எப்படி மோசமாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கான அறிகுறிகள் அவை என்றும் சல்லிவன் தெரிவித்தார்.