• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

மேலும் 18,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் அமேசான்!

ByA.Tamilselvan

Jan 5, 2023

அமேசான் நிறுவனம் மேலும் 18,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது ஊழியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா நோய்ப் பரவலுக்கு பிறகு ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார சூழல் காரணமாக டிவிட்டர், மெட்டா நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை கடந்தாண்டின் இரண்டாம் பாதியில் பணியிலிருந்து நீக்கம் செய்தனர்.
இவர்கள் வரிசையில் கடந்தாண்டு நவம்பர் மாதமே 10,000 ஊழியர்களை பணியிலிருந்து நீக்கம் செய்திருந்தது அமேசான் நிறுவனம்.இந்நிலையில், அமேசான் தலைமை செயல் அதிகாரி ஊழியர்களுக்கு இன்று காலை அனுப்பிய செய்தியில்,தற்போது நிலவும் கடினமான பொருளாதார சூழலை எதிர்கொள்வது மிகவும் சவாலாக உள்ளது. இதனால், மேலும் 18 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.