• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

அல்வா கிண்டிய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

ByA.Tamilselvan

Jan 27, 2023

மத்திய பட்ஜெட்டுக்கு முன் பழங்கால சம்பிரதாயப்படி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அல்வா கிண்டி அனைவருக்கும் வழங்கினார்.
பாராளுமன்றத்தில் ஆண்டுதோறும் மத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) சமர்ப்பிப்பதற்கு முன்னர் அச்சடிக்கும் வேலை தொடங்கும்போது பழங்கால சம்பிரதாயப்படி அல்வா எனும் இனிப்பு பொருள் தயாரித்து, இதுதொடர்பான பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு விநியோகம் செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில், டெல்லியில் உள்ள நிதித்துறை அமைச்சகத்தின் தலைமை அலுவலகத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் அல்வா தயாரிக்கப்பட்டு, அனைவருக்கும் பரிமாறப்பட்டது. மத்திய பட்ஜெட்டுக்கு முன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அல்வா கிண்டி அனைவருக்கும் வழங்கினார்.