தெலுங்கின் முன்னணி நடிகரான வெங்கடேஷ், பாலிவுட் நடிகரான நவாசுதீன் சித்திக் இணைந்து நடிக்கும் ‘சைந்தவ்’ படத்தின் படப்பணிகள் தொடங்கியுள்ளது
தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரான விக்டரி வெங்கடேஷ் நடிக்கும் 75-ஆவது படமான ‘சைந்தவ்’ திரைப்படத்தின் தொடக்க விழா ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்றது.இயக்குநர் சைலேஷ் கொலனு இயக்கத்தில் தெலுங்கின் முன்னணி நடிகரான விக்டரி வெங்கடேஷ் நடிக்கும் படம் ‘சைந்தவ்’. வெங்கடேஷின் 75-ஆவது படமாக உருவாகும் இப்படத்தில் பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இதன் மூலம் அவர் தெலுங்கு திரையுலகிற்கு அறிமுகமாகிறார்.
எஸ். மணிகண்டன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மாஸ் ஆக்சன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் போயனப்பள்ளி பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.